My free wheeling thoughts **என் எண்ணச்-சக்கரங்கள் ** - Sriram Narayanan

Monday, October 19, 2009

** Deepawali Greetings **

*********************
*********************************
******************************************

I WISH YOU & ALL YOUR FAMILY MEMBERS A VERY HAPPY DEEPAWALI

எனது உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்

******************************************
*********************************
*********************

** கடை தேங்காயும் வழி பிள்ளையாரும் **

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு கோடையில் ஸ்ரிநகர், குளிரில் ஜம்மு ஆக இரு தலை நகரங்கள் என்பது யாவரும் அறிந்த உண்மை. வருடம் தவறாமல் இந்த வைபவம் நடத்துவதற்கு எத்தனை கோடிகள் செலவாகிறது என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெற்றுள்ள பல அரசியல் சலுகைகளில் இதுவும் ஒன்று என நினைத்து விட்டாலும், இந்த இரண்டு நகரங்களில் ஒன்றை நிரந்தர தலைநகரம் ஆக்க என்ன தடை என்பதை எண்ணாமல் இருக்க முடியாது.

ஆனால், இத்தகைய கூத்து, மஹாராஷ்ட்டிராவிலும் நடை பெறுவது, பலர் அறியாத செய்தி. கோடையில் மும்பை மற்றும் குளிரில் நாக்பூர் ஆக, இரு இடங்களில், சட்டசபை கூட்டத்தொடர் நடக்கிறது. இதில் குறிப்பிடதக்க அம்சம் என்ன எனில், மும்பையை விட அதிக குளிர் காணும் நாக்பூரில் குளிர் காலக்க் கூட்டம் நடப்பதுதான்.

இப்படியாக, வருடத்துக்கு இரண்டு மூன்று நாட்கள் மட்டுமே நாக்பூரில் நடக்கும் பைத்தியக்காரத்தனத்துக்கு - வண்டி வாகனங்கள், போக்குவரத்து, அலுவல் நடைமுறை செலவு, அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் எடுபிடிகள் தங்கும் செலவு இத்தியாதி இத்தியாதி என, எத்தனையோ கோடிகள் விரயம் ஆகிறது. இந்த தேவை அற்ற முட்டாள்தனமான நடைமுறையை மாற்ற எந்த கட்சியும், ஆட்சியும் இது வரை முயன்றது இல்லை என்பதுதான் வேதனை.

சரி வீணாவது என்ன அவர்கள் கட்சிப்பணமா அல்லது தலைவரின் தந்தை வழி சொத்தா - மக்களின் வரிப்பணம் தானே ?? கடை தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பதுதான் கைவந்த கலை ஆயிற்றே !!!


** A nice poem **




அடுத்து முயன்றாலும் ஆகு நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றி பழா.